மேலும் அறிய

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு: மத்திய அரசு அதிகாரி

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு என மத்திய ஜல சக்தித் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். 

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு என மத்திய ஜல சக்தித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டிலுள்ள அணைகளை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது. அணை பாதுகாப்புக்காக தேசியக் குழு அமைக்கப்படும் என்பது தான் இந்த சட்டத்தின் அதி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இந்தச் சட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அணை பாதுகாப்புச் சட்டம் 2019, மட்டுமே முல்லை பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு என்று ஜல சக்தி துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும், கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியத்தின் உறுப்பினருமான பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அணை பாதுகாப்புச் சட்டமே சிறந்த தீர்வு: மத்திய அரசு அதிகாரி

அவருடைய பேட்டியில் இருந்து:

இந்தச் சட்டம் மாநில உரிமைகளில் அத்துமீறுவதாகக் கூறப்படுகிறதே.. நீங்கள் நினைப்பது என்ன?

இந்த சட்டம் மூலம் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய குழு அமைய வழிவகை செய்யும். அதேபோல், தேசிய அணை பாதுகாப்பு முகமை அமையும். இவற்றில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். இதனால், ஒருங்கிணைந்த அணைப் பாதுகாப்புக் கொள்கைகள் உருவாகும். அதன் மூலம் அணைகள் தொடர்பான பிரச்சனைக்கு நாடு தழுவிய தீர்வுகளை எட்ட முடியும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையமானது ஒரு ஒழுங்குமுறை ஆணையம் போல் செயல்படும்.

அது மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வழிவகை செய்யும். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து பொதுவான பிரச்சினைகளுக்கு ஒரே மாதிரியான தீர்வு எட்டப்பட உதவும். அதேவேளையில் மாநிலங்களில் தனிப்பட்ட கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாநில அணைப் பாதுகாப்பு குழுவின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.

ஒவ்வொரு மாநில அணைப் பாதுகாப்புக் குழுவிலும் அணையுடன் சம்பந்தப்பட்ட நீர் தேங்குமிடம், நீர் சென்றடையும் இடம் என இரண்டு மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார். இதனால் சுமுக தீர்வு எட்டப்படும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு இந்த சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா?

ஆண்டாண்டு காலமான நடைபெறும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு 2019 அணைப் பாதுகாப்புச் சட்டம் மட்டுமே சிறந்த தீர்வு பெற்றுத் தரும். அணைப் பாதுகாப்புச் சட்டம் பரிந்துரைத்துள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தமிழகம், கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு நடுநிலை அமைப்பாக இயங்கும். இதனால் அணைப் பாதுகாப்பில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். இரு மாநிலங்களுக்கும் இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget