Cyclone Asani: வங்க கடலில் உருவானது அசானி புயல்! ஆந்திரா, ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு!
Cyclone Asani: வங்க கடலில் தீவிரமடையும் அசானி புயல்; ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் “அசானி புயல்” உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறும் என்றும் ஆந்திரா- ஒடிசா கரையை நோக்கில் நகரும் என்றும் தெரிவித்துள்ளது.
மே10-ம் தேதி அசானி புயல் வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஆந்திரா, ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது.
Deep Depression over intensified into a cyclonic storm ‘Asani’ about380 km west of Port Blair (Andaman Islands).To move northwestwards and intensify further into a Severe Cyclonic Storm over east central Bay of Bengal during next 24 hours pic.twitter.com/3AkJAtHIxw
— India Meteorological Department (@Indiametdept) May 8, 2022
அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோரை தயார் நிலையில் வைத்துள்ளது அம்மாநில அரசுகள்.
அந்தமான், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை முதல் இரண்டு நாட்களும் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்’ என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்