மேலும் அறிய

Consumption Expenditure: உணவுக்காக மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது! அரசின் அதிர்ச்சி தரவுகள் சொல்வது என்ன?

உணவுக்காக மக்கள் செலவு செய்யும் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துவிட்டது.

தினசரி தேவைக்காக மக்கள் செலவு செய்யும் பணத்தை குறிப்பதே நுகர்வு செலவினம் (Consumption Expenditure). எளிதாக சொல்ல வேண்டுமானால், வீட்டின் தினசரி செலவை குறிக்கிறது. உணவு, மின்சாரம், வீட்டு வாடகை, தொலைபேசிக்கான கட்டணம், ஆடை வாங்குவது உள்ளிட்டவைக்காக மக்கள் செலவு செய்யும் மொத்த பணமும் இதில் அடங்கும்.  

மத்திய அரசின் தரவுகள் சொல்வது என்ன?

மக்கள் எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பது தொடர்பான தரவுகளை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey) நடத்தி வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் துறை, இந்த கணக்கெடுப்பை எடுத்து வெளியிடுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2017-18ஆம் ஆண்டு, நுகர்வு செலவின கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆனால், தரவுகளில் கோளாறு இருப்பதாகக் கூறி, அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை.

இந்த நிலையில், 11 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு, நுகர்வு செலவினம் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கணக்கெடுப்பு பணிகள், கடந்தாண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது.

"உணவுக்காக மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது"

தரவின் முக்கிய முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகவும் ஏழையாக உள்ள 5 சதவிகித மக்கள், ஊரகப் பகுதிகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 46 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர். அதேபோல, நகர்புறங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 67 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர்.

அதற்கு நேர்மாறாக, இந்தியாவில் மிகவும் பணக்காரராக உள்ள 5 சதவிகிதத்தினர், ஊரகப் பகுதிகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் செலவு செய்கின்றனர். நகர்புறங்களில் வாழும் பணக்காரர்கள், நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம், மக்களிடையே வருமானத்தில் பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுவது தெரிய வந்துள்ளது.

அதேபோல, நகர்புறங்களில் மக்களின் மாதாந்திர தனிநபர் வீட்டு செலவு கடந்த 2011-12 ஆண்டை ஒப்பிடுகையில் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, நகர்புறங்களில் தனிநபர் வீட்டு செலவு, 3,510 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் மக்களின் மாதாந்திர தனிநபர் வீட்டு செலவு 40.42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2,008 ருபாயாக அதிகரித்துள்ளது.

உணவுக்காக மக்கள் செலவு செய்யும் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துவிட்டது. 2011-12 ஆம் ஆண்டு, ஊரகப் பகுதிகளில் உணவுக்காக செலவு செய்யும் விகிதம் 52.9 சதவிகிதத்தில் இருந்து 46.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. நகர்புற பகுதிகளில், தங்களின் மொத்த செலவினத்தில் உணவுக்காக செலவு செய்யும் விகிதம் 42.6 சதவிகிதத்தில் இருந்து 39.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ரயிலில் இந்த பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா? இனி ரூ.10,000 அபராதம் உறுதி!
ரயிலில் இந்த பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா? இனி ரூ.10,000 அபராதம் உறுதி!
14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!
14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!

வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
Embed widget