Central Govt. Warned: யப்பா... செம்ம தில்லு தான்... மத்திய அரசை மிரட்டுன முதலமைச்சர் யாரு.? எதுக்காகன்னு தெரியுமா.?
மத்திய அரசையே ஒரு மாநில முதலமைச்சர் மிரட்டி இருக்காருன்னா, அவருக்கு எவ்ளோ தில்லு இருக்கணும்.? எந்த முதலமைச்சர், எதுக்காக மிரட்டினார்னு பார்க்கலாம்.

மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைக்காகதான் ஒரு மாநில முதலமைச்சர், மத்திய அரச மிரட்டி இருக்கார். அது எந்த மாநிலத்தோட முதலமைச்சர், என்ன சொல்லி மத்திய அரச மிரட்டினார்னு பார்க்கலாம் வாங்க.
நிலக்கரி உற்பத்தியில் முன்னணி மாநிலம்
ஜார்க்கண்ட் மாநிலம், வளமான நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது. இந்தியாவிலேயே நிலக்கரி அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக திகழ்வதும் ஜார்க்கண்ட் மாநிலம்தான். இந்த மாநிலம், 2024 கணக்கின்படி, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் அதிகபட்சமாக 26.4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. நிலக்கரி இருப்பும் அதிகமாக வைத்துள்ள மாநிலம் ஜார்க்கண்ட் தான். 2024-ம் ஆண்டு நிலவரப்படி, அங்கு சுமார் 83 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு உள்ளது. ஜார்க்கண்ட்டின் நிலக்கரி வளங்கள், நாட்டின் எரிசக்தி தேவைக்கான எரிபொருளாகவும், தொழில்துறை வளர்ச்சிக்கு சக்தி அளிப்பதாகவும் உள்ளன.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் ஜார்க்கண்ட் முதலமைச்சர் கோபம்
இப்படி, நாட்டின் எரிசக்தி தேவைகளுக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனக் கூறிய ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தங்கள் மாநிலம், அதன் கனிம வளங்களால் நாட்டின் கருவூலத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்திற்கும், அதன் பழங்குடி மக்களுக்கும் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என விமர்சித்திருந்தார். மேலும், மாநிலத்தின் உரிமைகளை பெற தொடர்ந்து போராடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசை மிரட்டிய ஹேமந்த் சோரன்
இந்த நிலையில், தன்பாத்தில் நடந்த நிகச்சி ஒன்றில் பேசிய ஹேமந்த் சோரன், மத்திய அரசிற்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தங்கள் மாநிலத்திற்கு நிலக்கரி தொடர்பான நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது மற்றும் மாநிலத்திலிருந்து செயல்படும் பொதுத்துறை நிலக்கரி உற்பத்தி சுரங்க நடவடிக்கைகளை நிறுத்த கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தங்கள் மாநிலம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாக விமர்சித்த அவர், தங்கள் மாநிலம் நிலக்கரி உற்பத்தியை நிறுத்தினால், நாடு இருளில் மூழ்கிவிடும் என ஆவேசமாக கூறியுள்ளார்.





















