(Source: Poll of Polls)
"கோழைத்தனம் - இதுதான் பாகிஸ்தான்” கராச்சியில் மக்கள் வசிப்பிடங்கள் மீது தாக்குதல்..!

இந்திய ராணுவம் பயங்கராவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவமோ அதனை எதிர்க்கொள்ள வக்கில்லாமல், கோழைத்தனமாக இந்திய பகுதியான உரியில் மக்கள் வாழும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் சாதாரண பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று நல்லெண்ணத்தில் இந்தியா தாக்குதலை குறி வைத்து நடத்தியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவமோ இந்தியாவின் இந்த தாக்குதலை எதிர்கொள்ள திராணியில்லாமல், பொதுமக்களை நோக்கி குறி வைத்து தாக்குதலை நடத்தி வருகிறது.
எப்படி, பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் கொலை செய்தனரோ அதையேதான் இப்போது பாகிஸ்தான் ராணுவம் உரியில் வாழும் மக்களை குறி வைத்து செய்து வர முனைந்துள்ளது. இது பாகிஸ்தான் ஆர்மியின் கடைந்தெடுத்த கோழைத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், என்ன செய்வதென்றே தெரியாமல் தாக்குதலை மக்கள் பக்கம் திருப்பியிருக்கிறது எதற்கும் லாயக்கற்ற பாகிஸ்தான் ராணுவம்.
இதற்கெல்லாம் சேர்த்து பாகிஸ்தானில் இறங்கியுள்ள இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டி வருகிறது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















