Breaking News LIVE: ’பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு முஸ்லீம் லீக் கோரிக்கை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Background
இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து 110.09 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
’பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு முஸ்லீம் லீக் கோரிக்கை
விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முஸ்லீம் லீக் கடிதம் எழுதியுள்ளது.
22 யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி
தவறான தகவல்களை பரப்பிய புகாரில் இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த 22 யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.





















