மேலும் அறிய
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிவா என்ற வழக்கறிஞர் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Key Events
Background
- மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு பாரபட்சம் என குற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
- பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் தனித்தனியே கூற முடியாது – நிர்மலா சீதாராமன்
- ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூபாய் 6 ஆயிரத்து 362 கோடி நிதி ஒதுக்கீடு – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
- சென்னையில் உள்ள பெரம்பூரில் 4வது ரயில் முனையம் அமைக்கப்படும்
- நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தின் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை தீவிரம் – தமிழ்நாடு போலீஸ் துரித நடவடிக்கை
- இந்தியாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்டது சனி சந்திர கிரகணம் – மக்கள் பார்த்து மகிழ்ச்சி
- தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ – தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராட்டம்
- நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ராயன் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி
- உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழான ஒலிம்பிக் நாளை தொடங்குகிறது
21:10 PM (IST) • 25 Jul 2024
சிவா என்ற வழக்கறிஞரை கைது செய்தது தனிப்படை போலீஸ்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை கைது செய்தது தனிப்படை போலீஸ்!
20:41 PM (IST) • 25 Jul 2024
Breaking News LIVE July 25: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!
Breaking News LIVE July 25: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் சிவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20:17 PM (IST) • 25 Jul 2024
ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி
20:08 PM (IST) • 25 Jul 2024
CM Stalin Tribute to Malaiappan Driver : பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
திருப்பூரில் பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய பிறகு இவரது உயிர் பிரிந்தது.
20:06 PM (IST) • 25 Jul 2024
Raayan Update : ஜி.வி பிரகாஷுக்கு X தளத்தில் நன்றி தெரிவித்தார் நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷின் ராயன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷுக்கு X தளத்தில் நன்றி தெரிவித்தார் நடிகர் தனுஷ்!
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion