Breaking News LIVE: பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்புரி தாக்கூருக்கு பாரத ரத்னா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
Tamil Nadu Cabinet Meeting: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்:
தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து அரசு சார்பில் முக்கிய முடிவுக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 28ம் தேதி முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடங்க உள்ள சூழலில், இன்றைய அம்மைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் சட்ட-ஒழுங்கை பாதுகாப்பது, பிரச்னைகளை கையாள்வது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த நிறுவனங்கள் குறித்தும், அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் ஆகிய காரணங்களால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் ஆளுநர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்:
வரும் 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி முதல் வாரம் தான் அவர் சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் போது அவர் மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாகவும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்புரி தாக்கூருக்கு பாரத ரத்னா
பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்புரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம்
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பை நான் ஆன்மீகமாகவே பார்க்கிறேன் - ரஜினிகாந்த்
அயோத்தி ராமர் கோயில் திறப்பை நான் ஆன்மீகமாகவே பார்க்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
Breaking News LIVE: தொடர் விடுமுறை எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தைப்பூசம் மற்றும் குடியரசு தினம் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையால் தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மண்டலங்கள் மற்றும் பெங்களூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 580 சிறப்பு பேருந்துள் இயக்கப்படவுள்ளது. மேலும் திருவண்ணாமலை கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கிருந்து சென்னைக்கு 10 குளிர்சாதனப் பேருந்து இயக்கவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Breaking News LIVE: சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,053.10 அல்லது 1.47 % புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 333 அல்லது 1.54% சரிந்து 21,238.80 ஆக வர்த்தகமாகியது.