மேலும் அறிய

Breaking News LIVE: சபாநாயகரை மீண்டும் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:  சபாநாயகரை மீண்டும்  சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்

Background

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில்,  பொதுமக்கள் ஆர்வமுடன் அதனைப் பெற காத்திருக்கின்றனர். 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்தாண்டுபணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில், பொருட்களும் தரமில்லாமல் வழங்கப்படதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் நடப்பாண்டு பொங்கலை கொண்டாட சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வீடு, வீடாக தொடங்கியது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு பரிசுப்பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல் எம்பிக்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாநிலத்தின் மற்ற  இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு  முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால்  புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், அதனை பெற முடியாதவர்கள் ஜனவரி 16 ஆம் தேதி  பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

22:00 PM (IST)  •  09 Jan 2023

முன்னாள் முதலமைச்சரை சந்தித்த ரஜினிகாந்த்...

நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், நட்பின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவை நேரில் சந்தித்தார்.

21:55 PM (IST)  •  09 Jan 2023

மது அருந்துவதால் 7 வகை புற்றுநோய் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மது குடிப்பதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற 7 வகை புற்றுநோய் ஏற்படும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

18:02 PM (IST)  •  09 Jan 2023

சபாநாயகரை மீண்டும் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்

எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுகவினர் நடத்திய கூட்டம் முடிவுற்ற நிலையில் சபாநாயகரை மீண்டும் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17:43 PM (IST)  •  09 Jan 2023

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து வரும் 20ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

13:00 PM (IST)  •  09 Jan 2023

Breaking News Live : பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் போராட்டம்

பணிநீக்கம் செய்யப்பட் செவிலியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் கோரிக்கை மனுவை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம், மதுரை உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து செவிலியர்கள் கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பியுள்ளனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget