மேலும் அறிய

Breaking LIVE : பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Key Events
Breaking Live news on 17th august 2022 Breaking LIVE : பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
விரைவுச்செய்திகள்

Background

பிரதமர், குடியரசு தலைவரை இன்று சந்திப்பதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று காலை 11. 30 மணிக்கு புதிதாக பதவியேற்று கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும், மாலை 4. 30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்வைப்பார் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

முன்னதாக நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு டெல்லி பயணம் குறித்து பேசினார். அதில், “ டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன். காவடி தூக்கப்போகவில்லை என எம்.பி திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும்,பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு தம்பி திருமாவளவன் உதாரணம். தேர்தல் வரும் போகும், இயக்கங்களும் கொள்கைகளும் எப்போதும் இருக்கும். நமது கூட்டணி கொள்கைக் கூட்டணி அதனை யாராலும் பிரிக்க முடியாது. பாஜகவிற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜக மற்றும்  ஆர்.எஸ்.எஸ். உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தமிழ்நாடு அரசு சனாதனவாதிகளால் அதிகப்படியான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது. 

பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட கருத்துக்களை நிறைவேற்றவே ஆட்சி செய்கிறோம். இந்த விழாவை முடித்து விட்டு டெல்லிக்கு செல்லவிருக்கிறேன். டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன், காவடி தூக்கப் போகவில்லை எனவும் அதிரடியாக கூறியுள்ளார். திமுகவின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். விசிகவிற்கும், திமுகவிற்கும் உள்ள உறவு தாய்-பிள்ளை உறவு, இது எப்போதும் தொடரும். பெரியார், கலைஞர் 95 வயதுவரை  வாழ்ந்து மக்கள் பணி ஆற்றினர், அவ்வகையில் திருமாவளவனும் மக்கள் பணி செய்யவேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

16:03 PM (IST)  •  17 Aug 2022

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்தையடுத்து பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்

14:24 PM (IST)  •  17 Aug 2022

மனோஜ்  பாண்டியன், வைத்தியலிங்கம் உடன் இருந்தனர்

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தியபோது அவரது ஆதரவாளர்கள் மனோஜ்  பாண்டியன், வைத்தியலிங்கம் உடன் இருந்தனர்

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget