Rimi Sen: ஒன்னு வச்சா ரெண்டு கிடைக்கும்.. ஆசையில் மோசம் போன 4.5 கோடி! பிரபல நடிகையின் சோகக் கதை!
பாலிவுட் நடிகை ரிமி சென் இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற ஆசையில் 4 1/4 கோடி ரூபாயை ஏமாந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரபல நடிகையான 40 வயதான ரிமி சென் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னனி நாயகர்களுடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தநிலையில், மீண்டும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, நடிகை என்ற அடையாளத்தை கொண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்தநிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஜிம்முக்கு சென்று தீரமாக உடற்பயிற்சி செய்து வந்தார். அப்போது அந்த ஜிம்முக்கு வந்த மும்பை கோரேகானை சேர்ந்த ரவுனக் ஜதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை தொழில் அதிபர் என்றும் நிதி நிறுவனம் நடத்துவதாகவும் ரிமி சென்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் சிறிது நாட்கள் நட்புடன் பழகி வந்துள்ளார். மேலும், ரவுனக் ஜதின் தனது எல்இடி நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி நடிகை ரிமிடம் கூறியுள்ளார்.
இதனை முதலில் நம்பிய ரிமி சென் சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளார். சிறிது நாட்களில் ரவுனக் ஜதினும் சொன்னபடியே பணம் இரட்டிபாக்கி கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த 3 வருடங்களாக ரிமி சென் முதலீடு தொகையை உயர்த்தி கொடுத்துள்ளார். அதன்படி, பணமும் தொடர்ந்து இரண்டு மடங்காக கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் பணத்தின்மீது உள்ள ஆசையில் ரிமி சென் தனது நண்பர்கள் உறவினர்கள் என பலரிடம் பணத்தை பெற்று சுமார் 4 1/4 கோடி ரூபாயை அண்மையில் முதலீடு செய்துள்ளார் .
இந்த பணம் விரைவில் இரட்டிப்பாக தன்னிடம் வரும் என்று எதிர்ப்பார்த்தநிலையில் பணம் தொடர்பான எந்தவொரு செய்தியும் இவருக்கு கிடைக்கவில்லை. அதேபோல், ஆண் நண்பர் ரவுனக் ஜதின் செல்போன் எண்களும் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தான் ஏமாந்துவிட்டதாக அறிந்த நடிகை ரிமி சென் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் ரவுனக் ஜதின் மீது ஐபிசி 420, 409 ஆகிய பிரிவுகளில் மோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பணத்துடன் தலைமறைவான ரவுனக் ஜதின் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்