மேலும் அறிய

"இதை பத்தி நீங்க பேசக்கூடாது" விவசாயிகள் குறித்து சர்ச்சை.. கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!

விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்பி கங்கனா ரனாவத் சர்ச்சையாக பேசியுள்ளார். இது, அவருடைய தனிப்பட்ட கருத்து என பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கு பாஜக விளக்கம் அளிக்கும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கங்கனா ரனாவத் தெரிவித்த சர்ச்சை கருத்து: கடந்த 2020ஆம் ஆண்டு, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். இறுதியில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வேளாள் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது.

தொடக்கத்தில் இருந்தே, விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருபவர் கங்கனா ரனாவத். அரசாங்கம் சார்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் வங்கதேசத்தில் ஏற்பட்டது போன்ற நெருக்கடி, விவசாயிகளின் போராட்டத்தால் இந்தியாவிலும் உருவாகி இருக்கும் என கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது. கங்கனா ரனாவத்தின் கருத்துகள் கட்சியின் கருத்துகளாக எடுத்து கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், "கங்கனா ரணாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களில் பேச அதிகாரம் இல்லை.

"இதை பத்தி எல்லாம் நீங்க பேசக்கூடாது"

அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை சொல்லாமல் தவிர்க்குமாறு ரணாவத்துக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி பஞ்சாப் பாஜக தலைவர் ஹர்ஜித் கிரேவால் கூறுகையில், "தனக்கு தொடர்பு இல்லாத விவசாயிகள் குறித்து கங்கனா பேசி இருக்கிறார். 

இது, அவருடைய தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகளுக்கு நண்பர்கள். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. கங்கனாவின் பேச்சும் அதையே செய்கிறது. உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்களான மதப் பிரச்சனைகள், மத அமைப்புகள் குறித்து அவர் பேசக்கூடாது" என்றார்.

கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, "இவை வெறும் கங்கனாவின் வார்த்தைகளா அல்லது வேறு யாரையோ நகலெடுத்து பேசி இருக்கிறாரா? இல்லையென்றால், இந்த விவகாரத்தில் பாஜக ஏன் மவுனம் காக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget