Dosa: மசாலா தோசைக்கு சாம்பார் கொடுக்காத உணவக உரிமையாளர்: அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
sambar with dosa: பீகார் மாநிலத்தில் உள்ள உணவகத்தில் ஒருவருக்கு தோசைக்கு சாம்பார் வழங்கவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள உணவகத்தில் ஒருவருக்கு தோசைக்கு சாம்பார் வழங்கவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
’சாம்பர் கொடுக்கல’
பீகார் மாநிலத்தில் உள்ள உணவகத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உணவு சாப்பிட சென்றுள்ளார், மனீஷ் பதக் கோலா. மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் அவரது அம்மாவும் சென்றுள்ளார். ஸ்பெசல் மசாலா தோசை ஆர்டர் செய்துள்ளார். ரூ.140 கொடுத்து தோசை பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. சாம்பார் பாக்கெட்டை காணவில்லை. தோசைக்கு மிகவும் ஏற்றது சாம்பார்தான். தோசைக்குத் தொட்டுக்கொள்ள வேறேதோ சட்னி கொடுத்துள்ளனர். அன்றி இரவு என்பதால், வேறு வழியில்லாமல், சாம்பார் இல்லாமல் தோசையை சாப்பிட்டனர். மறுநாள் காலையில் முதல் வேலையாக, உணவகத்திற்கு சென்ற மனீஷ், தோசைக்கு சாம்பார் வழங்படாதது குறித்து முறையிட்டுள்ளார். ஆனால், உணவகம் நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் இல்லை. அதோடு, ’ரூ.140 கொடுத்து நீ மொத்த உணவகத்தையும் வாங்கிட முடியாது.’ என்று கூறியுள்ளார்.
உணவக நிர்வாகத்தினர் இப்படி சொன்னது மனீஷின் கோபத்தை ஏற்படுத்தியது. நுகர்வோரின் தேவையை புரிந்து கொள்ளாமல், அவமதித்ததற்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த வெட் பிரகாஷ் சிங் மற்றும் வருண் குமார் கொண்ட குழு ஓராண்டிற்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, உணவக உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதமாக அளிக்க உத்தரவிட்டது.