UKG Child : யுகேஜி மாணவியை ஃபெயிலாக்கிய பெங்களூரு பள்ளி: தெளிவு கோரி உத்தரவிட்ட மாநில அரசு
பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது.
பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது. இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் 6 வயது குழந்தை என்றுகூட பாராமல் கடுமையாக நடந்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், மாணவியின் பெற்றோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பெங்களூரு அனேக்கல் டவுனின் புறநகரில் உள்ள செயின்ட் ஜோசஃப்ஸ் சாமினேட் அகாடமியில் நடந்துள்ளது. அண்மையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கு ரேங்க் கார்டு கொடுத்துள்ளனர். அதில் அவர் ஒரு பாடத்தில் 40க்கும் 5 மதிப்பெண் வாங்கியதாகக் குறிப்பிட்டு தேர்வில் ஃபெயில் எனக் கூறியுள்ளனர்.
பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் குமார் இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையை ஃபெயிலாக்கியுள்ள அந்த அற்புதமான பள்ளிக் கூடத்திற்கு நான் ஒருமுறையாக சென்று பார்வையிட விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது. இருந்தும் அவ்வாறாக ஃபெயிலாக்கி உள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தையின் தந்தை மனோஜ் பாதல், இவ்வாறாக 6 வயது குழந்தையை ஃபெயிலாக்கி அறிவித்துள்ளது அக்குழந்தையின் மனநிலையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், நாங்கள் எந்த ஒரு மாணவனையும் ஃபெயிலாக்குவதில்லை. நாங்கள் மொபைல் செயலி மூலம் ரிசல்ட் அனுப்புகிறேன். அந்த செயலீயில் பாஸ் மார்க், ஃபெயில் மார்க் செட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறு காட்டியிருக்கும். நாங்கள் யாரையும் ஃபெயிலாக்கவில்லை. இது தொடர்பாக பெற்றோருக்கு விளக்கமளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்திற்கும் ஃபெயில் மார்க் என குறிப்பிடும் ப்ரோகிராமை மாற்றுமாறும் கூறியுள்ளோம்.
இருப்பினும் சம்பந்தப் பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு வட்டார கல்வி அலுவலர் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்கேஜி, யூகேஜி போன்ற மழலையர்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக்கூடாது என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கடந்த 2019 ஆம் ஆண்டே அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து என்சிஇஆர்டி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் வேலை, மழலையர் பள்ளி குழந்தைகளை தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர் என்று அடையாளப்படுத்துவற்கு இல்லை. அப்படி குழந்தைகளை அடையாளப்படுத்தினால் அவர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு மந்த நிலைக்கு செல்கிறார்கள். இதற்கு பல பெற்றோர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே, கல்வி முறையில், எவை எல்லாம் செய்யக்கூடாது, செய்யக் கூடியது என்று என்சிஇஆர்டி வரையறை செய்துள்ளது. அதன்படி, மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எந்தவொரு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக் கூடாது. அதில், குழந்தைகளுக்கு, சமூகத்தோடு எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்து பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சுருக்கமாக எழுத, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் உள்ள பல மழலையர் பள்ளிகள், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் மற்றும் ஆங்கிலத் திறன் அறிவு தேர்வு முறைகளை வைத்துள்ளது. ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வி செல்லும் வரை, அவர்களுக்காக ஒரு கோப்பு உருவாக்கி, அதை பெற்றோர்களின் கவனத்தில் வைக்கவேண்டும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.