Bengaluru Power Outage: பெங்களூருவில் நாளை (23.01.26) 9 மணி நேரம் மின் தடை- பக்காவா பிளான் பண்ணிக்கோங்க… இதோ லிஸ்ட்!
Bengaluru Power Cut (23-01-2026): நந்திக்குடி எல்லைக்கு உட்பட்ட 10 வெவ்வேறு கிராமங்களில், காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

பெஸ்காம் எனப்படும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் பெங்களூருவில் இன்றும் நாளையும் மிகப்பெரிய மின் தடையை அறிவித்துள்ளது.
இதன்படி பெங்களூரு, தாலுகாக்கள் மற்றும் சில கிராமங்களில் 9 மணி நேரத்துக்கு மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த மின் தடை என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. குடி மக்கள், தேவையான சமாளிப்புகளை மேற்கொண்டு ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நந்திக்குடி எல்லைக்கு உட்பட்ட 10 வெவ்வேறு கிராமங்களில், காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மின் தடை?
நந்திகுடி, வாசனா, இங்கலகோண்டி, ஹுலாகினஹோல், ஜெரேஹோல், மாரஹள்ளி, ஜிடி கட்டே, கோவினா ஹாலு, நூசிகொண்டி, உக்கடகாத்ரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
இது தவிர, ஜோடிதார் பகுதியில் உள்ள என்ஜி ஹள்ளி மற்றும் ஜி ஹள்ளி மின் விநியோக மையங்களுக்கு மின் இணைப்பை வழங்குவதற்காக இடைக்கால 66 KV கோபுரம் அமைக்க மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமகிரி, துப்படஹள்ளி, சிங்கெனஹள்ளி, தாலிகட்டே, ஹனுமாலி, டோக்னனல், டம்மி, கல்கெரே, ரங்காபூர், பொம்மனஹள்ளி, கௌடிஹள்ளி, கடூர், சிக்கந்தவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை எங்கெங்கே பவர் கட்?
ஜனவரி 21 முதல் 23ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. நாளை (ஜனவரி 23) சிக்கநாயக்க- நாஹள்ளி, ஹுலியாறு, கத்ரிகேஹல், ஹந்தனகெரே மற்றும் திம்மனஹள்ளி பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்.
மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.
மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.
பெங்களூரு மாநிலத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்பட்ட மின் தடை குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது லேட்டஸ்ட் விவரங்களை, http://bescom.karnataka.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். அதேபோல 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தும் மின் தடை பெறலாம்.






















