பெங்களூரு மெட்ரோ 2ம் கட்ட பணிகள்.! போக்குவரத்தில் சிக்கல் இருக்கும்.. இந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மெட்ரோ 2ம் கட்ட பணிகள் நடைபெறுவது தொடர்பாக, போக்குவரத்தில் பாதிப்பு இருக்கும் என்று, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு நம்ம மெட்ரோ பணிகள் 95 சதவீத முடிவடைந்துள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த பகுதி பொதுமக்களுக்கு திறக்கப்படும் என பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது.
பெங்களூரு மெட்ரா பணிகள்:
இந்நிலையில், மெட்ரோ பணிகள் நடைபெறுவது தொடர்பாக, போக்குவரத்தில் பாதிப்பு இருக்கும் என்கிற அறிவிப்பு ஒன்றை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது, “ தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்ட பணியில் , சர்ஜாபூர் செல்லக்கூடிய வெளிவட்ட சாலைப்பகுதியில், 4 தூண்களானது அமைக்கப்படவுள்ளது. இந்த பணியானது நிறைவடைய சுமார் 45 நாட்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிவட்ட சாலை மற்றும் பிரதான சாலைகளில் பேரிகாட் அமைக்கப்பட்டிருக்கிறது. ( Outer Ring Road 27 மெயின் ரோடு பாலம் முதல் Ibbalur அரசு பள்ளி வரை ).
மக்களுக்கு முன்எச்சரிக்கை:
இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து பயணம் மெதுவாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Traffic Advisory. @DCPSouthTrBCP @Jointcptraffic @CPBlr @blrcitytraffic @BlrCityPolice @acphsrtrps @acpwfieldtrf @halairporttrfps @DCPTrEastBCP @hsrltrafficps @madivalatrfps @wftrps @0RRCA pic.twitter.com/RLJiI9TWn4
— BELLANDURU TRAFFIC BTP (@bellandurutrfps) February 19, 2025
தண்டவாளம் அமைக்கும் பணி 90 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், நிலைய கட்டுமானம், சிக்னலிங், தொலைத்தொடர்பு, மின்சாரம், ஏர் கண்டிஷனிங் அமைப்புகள், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் உள்ளிட்ட பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.