Bank Strike: தேதி குறிப்பிடாமல் வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கிகள்..!
அகில இந்திய சம்மேளனம் சார்பில் வங்கி ஊழியர்கள் 19 ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய சம்மேளனம் சார்பில் வங்கி ஊழியர்கள் 19-ம் தேதி அதாவது இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேலை நிறுத்தம் தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் பொது செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவிக்கையில், “வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்கள் என்பதை பார்த்து, அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் காரணமாக அனைத்து வங்கி கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு சில வங்கிகள் ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை தாங்கள் பணியாற்றும் ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இது தொழிலாளர்கள் சட்டத்தை மீறும் செயல்.
சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல்பணி நடவடிக்கை, பொதுமக்களிடம் வைப்புத்தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும், அவர்களுக்கான எந்தவித இழப்பீட்டையும் அவர்கள் வழங்கவில்லை.
எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கடந்த 5ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்பின்னர், கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்து, தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று நேற்று வங்கிகள் கூட்டமைப்புடன் மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி வருகின்ற 19ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.” என தெரிவித்தார்.
இந்நிலையில், 19ஆம் தேதி மாதத்தின் 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியின் வேலை, எனவே வங்கி வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டம் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர எங்களது கோரிக்கைகளில் நாங்கள் பின் வாங்குவதாக இல்லை என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் வங்கி விடுமுறைகள்:
நவம்பரில் பல வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகள் வங்கி விடுமுறை நாட்களை ஒப்பிடும் போது குறைவான நாட்களே மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள். பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், நவம்பர் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 10 நாட்கள் வரை வங்கிகள் மூடப்படும்.
இரண்டாவது சனி, ஞாயிறு தவிர, நவம்பர் 1,8,11, மற்றும் 23 ஆகிய தேதிகளில் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. நவம்பர் 19, சனிக்கிழமை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் திட்டமிடப்பட்ட வங்கி விடுமுறைகள் . சனிக்கிழமை வேலை நிறுத்தம் காரணமாக சில ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.