மேலும் அறிய

அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவுக்கு வாய்ப்பு.. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கடும் எச்சரிக்கை..!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் சிறிய அளவிலான பனிச்சரிவு சம்பவங்களுக்கு வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு எச்சரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் சிறிய அளவிலான பனிச்சரிவு சம்பவங்களுக்கு வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு எச்சரித்துள்ளது.

அதன்படி டோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரம்பான் உள்ளிட்ட மாவட்டங்களில் பனிப்பாறை சரிவு எச்சரிக்கை இருப்பதால் மக்கள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரை மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனிச்சரிவு ஏன் ஏற்படுகிறது?

பனியடுக்குச் சரிவு (avalanche) அல்லது பனிச்சரிவு (snowslide)) என்பது சரிவான மேற்பரப்பில் உறைந்த பனி சரிந்து விழுவதாகும். பனி போர்த்திய தளத்தில் சில இடங்களில் அதன் வலிமை குறைவாக இருக்கலாம். அதாவது அந்தப் பரப்பின் மீதுள்ள விசை அதன் வலிமையைக் காட்டிலும் கூடுதலாக அமையும்போது அந்த இடம் சரிந்துவிடுகிறது. இதைத்தான் நாம் பனிச்சரிவு என்று அழைக்கிறோம். சிலவேளைகளில், இது படிப்படியாக மெல்லத் தளர்ந்து அகலமாகிப் பாய்கிறது. இது தளர்பனிச் சரிவு எனப்படுகிறது. 

திபெத் பனிச்சரிவு:

2023 தொடங்கியவுடனேயே ஜனவரி மாதம் சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின், தென்மேற்கு பகுதியில் உள்ள நியிஞ்சி நகரில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட பனிச்சரிவில் பல்வேறு வாகனங்கள் சிக்கிக் கொண்டன. தகவல் அறிந்து 131 மீட்பு படை வீரர்கள், 28 அவசர கால வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.துரிதமாக செயல்பட்ட வீரர்கள், 70 வாகனங்களில் இருந்த 246 பேரை பத்திரமாக வெளியேற்றினர். இருப்பினும் பனிசரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பனிச்சரிவு ஏற்பட்ட நியிஞ்சி நகரம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா ஆர்வலர்களால் "திபெத்தின் சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் நியிஞ்சியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியது.

அதிக ஆபத்தை எதிர்நோக்கும் ராணுவ வீரர்கள்:

ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை பனிச்சரிவில் சிக்குபவர்களில் ராணுவத்தினரே அதிகம். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

பனிச்சரிவு, பருவம் தவறிய மழை, பனிப்பாறை சரிவு ஆகிய காலநிலை மாற்றத்தின் காரணமாக தீவிரமான வானிலை சூழல்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கால நிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைத்த ஐ.நா. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் முதல் ஒப்பந்தமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு புவி வெப்பமயமாதல் அதிகரிக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Breaking News LIVE:  இலங்கை அதிபர் தேர்தல்: இதுவரை 35 குற்றச்சம்பவங்கள்- தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்: இதுவரை 35 குற்றச்சம்பவங்கள்- தேர்தல் ஆணையம்
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
Rishabh Pant:  ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Rishabh Pant: ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Embed widget