சைவ பால் தயாரிக்க கூறிய பீட்டா; பதிலடி தந்த அமுல் இயக்குனர்!
‛‛கால்நடை விவசாயிகள் பலரும் நிலமற்றவர்கள். நீங்கள் சொல்லும் சைவ பால் யோசனை அத்தகைய நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும். பால் தான் எங்களின் நம்பிக்கை, எங்களின் கலாச்சாரம், எங்களின் சுவை, எங்களின் உணவுமுறை, எங்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து" என்று காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
சைவப் பால் தயாரிக்கலாமே! அமுல் நிறுவனத்துக்கு யோசனை சொல்லும் பீட்டா
முழுக்க முழுக்க தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் சைவ பால் (வேகன் மில்க்) தயாரிக்குமாறு இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையான அமுல் நிறுவனத்துக்கு விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் People for the Ethical Treatment of Animals (PETA) அமைப்பு யோசனை கூறியுள்ளது.
அமுல் (Anand Milk Producers Union Iimited (AMUL)என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும்.
இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2.8 மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய ஜி.சி.எம்.எம்.எப். எனப்படும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது. அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது" என்பது பொருளாகும்.
அமுல் நிறுவனம் பல்வேறு பாலும் பால் சார்ந்த பொருட்களையும், ஐஸ்க்ரீம் வகைகளையும் உற்பத்தி செய்து நாடு முழுவதும் பெரும் சந்தையை தன்வசம் வைத்துள்ளது. அமுல் சார்ந்து நாடு முழுவதும் கோடிக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் லாபமடைகின்றனர்.
அப்படிப்பட்ட அமுல் நிறுவனத்தை முழுக்க முழுக்க தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் சைவ பால் (வேகன் மில்க்) தயாரிக்குமாறு பீட்டா யோசனை கூறியுள்ளது.
இதுதொடர்பாக பீட்டா நிர்வாக இயக்குநர் அமுல் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சொதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "உலகம் முழுவது தாவர உணவு (வேகன் உணவு) முறை பழக்கவழக்கத்தால் அதற்கான சந்தை அதிகரித்துள்ளது. அதன் மூலம் அமுல் நிறுவனமும் லாபம் ஈட்டலாம். தாவர உணவு உண்போரின் தேவைக்காக அமுல் அத்தகைய உணவுப் பதார்த்தங்களை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மற்ற நிறுவனங்கள் எங்களின் கோரிக்கையை பரிசீலித்துள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.
Peta wants Amul to snatch livelihood of 100 mill poor farmers and handover it's all resources built in 75 years with farmers money to market genetically modified Soya of rich MNC at exhorbitant prices ,which average lower middle class can't afford https://t.co/FaJmnCAxdO
— R S Sodhi (@Rssamul) May 28, 2021
இது தொடர்பாக சொதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கால்நடை விவசாயிகள் பலரும் நிலமற்றவர்கள். நீங்கள் சொல்லும் சைவ பால் யோசனை அத்தகைய நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும். பால் தான் எங்களின் நம்பிக்கை, எங்களின் கலாச்சாரம், எங்களின் சுவை, எங்களின் உணவுமுறை, எங்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து" என்று காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
அவரின் இந்தப் பதிலை ட்விட்டராட்டிகள் கொண்டாடி வருகின்றனர். பீட்டாவின் மூக்கை நுழைக்கும் செயலுக்கு நல்ல பதிலடியைக் கொடுத்துவிட்டதாகக் கூறிக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய பீட்டாவின் செயல்பாடுகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.