மேலும் அறிய

Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு

Pranab Mukherjee: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவு மண்டபம் கட்ட, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Pranab Mukherjee: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதிசடங்கு நடத்த இடம் ஒதுக்கவில்லை என, மத்திய பாஜக அரசை காங்கிரஸ் சாடி வரும் நிலையில் இந்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம்:

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைநகர் ராஜ்காட்டில் உள்ள 'ராஷ்ட்ரிய ஸ்மிருதி' பகுதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை, செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, பிரணாப்பின்  மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ளார். தனது தந்தைக்கு நினைவிடம் உருவாக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “எனது தந்தைக்காக நினைவிடம் அமைக்கும் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமயிலான அரசுக்கு எனது இதயத்தின் மையத்தில் இருந்து நன்றி. நாங்கள் கேட்காமலே நினைவிடம் அமைக்கும் அரசின் செயல்,  பிரதமரின் உண்மையான கருணையுள்ள நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.

அரசு கடிதம்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சமாதி அமைப்பதற்காக 'ராஷ்டிரிய ஸ்மிருதி' வளாகத்திற்குள் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒதுக்கப்பட்ட இடத்தை ஒதுக்க தகுதி வாய்ந்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி இந்த இந்த கடிதம்  வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மரியாதை நிமித்தமாக பிரணாப்பின் மகள் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31, 2020 அன்று இறந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

மன்மோகன் சிங் நினைவிட குழப்பம்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 26-ம் தேதி காலமானதை தொடர்ந்து,  டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் அவரது இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டடது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை அவரது நினைவிடம் கட்டப்படும் இடத்தில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷும் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியதுடன், முன்னாள் பிரதமரின் தகனம் மற்றும் நினைவிடத்திற்கு சரியான இடத்தை அரசாங்கத்தால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.  "இது இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமானத்தைத் தவிர வேறில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் அரசுக்கு பாரம்பரியங்களை நினைவூட்டுகிறது, ஆனால் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஒரு நினைவகம் கட்டவில்லை என்று பாஜக சாடியது. இதனால் இரு கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் முற்றி வரும் சூழலில், பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்கும் முடிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget