மேலும் அறிய

கொரோனா பணிச்சுமையால் கவச உடையில் டான்ஸ் ஆடிய ஆம்புலன்ஸ் டிரைவர் - வைரல் வீடியோ

திருமண ஊர்வலத்தில் டான்ஸ் ஆடி தனது மன அழுத்தத்தை போக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர். உத்தரகாண்டில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்.

உத்தரகாண்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது மனஅழுத்தத்தை குறைக்க  கவச உடையுடன் திருமண ஊர்வலத்தில் டான்ஸ் ஆடினார்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று  பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் பலர் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். தூக்கமின்றி, சரியான உணவின்றி தொடர்ந்து வேலை செய்து வருவதால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், தங்களுடன் பணிபுரிபவர்களிடமே கோபத்தை வெளிக்காட்டி சண்டையிக் கொள்வதும் போன்ற செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது மன அழுத்தத்தை குறைக்க  கவச உடையுடன் திருமண ஊர்வலத்தில் டான்ஸ் ஆடினார்.

அந்த மாநிலத்தின் லல்த்வானி என்ற இடத்தில் சுஷிலா திவாரி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியில் ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மருத்துவக்கல்லூரி அருகே திருமணம் ஊர்வலம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த அருகில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர், ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட இசைக்கேற்ப,  தான் அணிந்திருந்த முழு கவச உடையுடன் பயங்கரமான ஒரு டான்ஸ் ஆடினார்.

Corona Dance :
The man in the PPE kit is an ambulance driver, Mahesh, carrying Covid patients for a while.
As a marriage procession passed from this hospital in Uttarakhand, Mahesh tried to reduce the stress by dancing in the procession.
👌👌👌👌👌 pic.twitter.com/KjSDGPvCox
— जनरल नरभक्षी™ 🏹🚜 (@GDnarbhakshi) April 27, 2021

இதை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார். டான்ஸ் ஆடிய ஆம்புலன்ஸ் டிரைவரின் பெயர் மகேஷ் என்று தெரியவந்துள்ளது. கொரோனாவால் அதிக பணிச்சுமை ஏற்பட்டு, அதனால் மனஇறுக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதில் இருந்து மீளவே, தன்னை மறந்து இசையைக் கேட்டதும் அவர் துள்ளிக்குதித்து டான்ஸ் ஆடியுள்ளார் என்று வீடியோவை பார்த்த சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த வீடியோ சமூகவளைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Embed widget