மேலும் அறிய

அக்னிபத்  திட்டம்: விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசுகிறார் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி

அக்னிபத்  திட்டம் குறித்து விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசவிருக்கிறார் விமானப்படை தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி. 

அக்னிபத்  திட்டம் குறித்து விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசவிருக்கிறார் விமானப்படை தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி. 

நாட்டில் உள்ள ஆறு ஃபார்வர்டு பேஸ்களுக்கும் செல்லும் அவர் அங்குள்ள வீரர்கள் மத்தியில் அக்னிபத் திட்டம் குறித்து ஆலோசிக்கவிருக்கிறார். இது தொடர்பாக விமானப் படை வெளியிட்ட அறிக்கையில், படையில் உள்ள கடைநிலை வீரர் வரை அனைவருக்குமே மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தைப் பற்றி முழுமையாக எடுத்துரைப்பதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் படைக்கு தற்போது நாடு முழுவதும் 60 ஏர் ஸ்டேஷன்கள் உள்ளன. இவை ஏழு கமாண்ட் கீழ் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வெஸ்டர்ன் ஏர் கமாண்ட் புது டெல்லியில் உள்ளது. ஈஸ்டர்ன் ஏர் கமாண்ட் மேகாலாயாவின் ஷில்லாங்கில் உள்ளது, சென்ட்ரல் ஏர் கமாண்ட் பிரக்யாராஜில் உள்ளது, சதர்ன் ஏர் கமாண்ட் திருவனந்தபுரத்தில் உள்ளது, தென் மேற்கு ஏர் கமாண்ட் காந்திநகரில் உள்ளது, ட்ரெயினிங் கமாண்ட் பெங்களூருவில் உள்ளது, பராமரிப்பு கமாண்ட் நாஹ்பூரில் உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமானப்படை தளமானது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹிண்டோனில் உள்ளது. அக்னி பத்  திட்டம் குறித்து விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசவிருக்கிறார் விமானப்படை தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி.

முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை. இதனால் அக்னிபத்  திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சேர்க்கப்படும் வீரர்களுக்கான வயது வரம்பு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு ஆண்டுகளில் ராணுவ கனவு நிறைவேறாமல் இருந்த இளைஞர்களும் சேர முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்டமும் எதிர்ப்பும்:

இந்திய ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இளைஞர்களும், மாணவர்களும் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பீகாரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் ரயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ரயில்நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதால் ரயில்சேவை மூன்று மணிநேரம் பாதிக்கப்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற ரயில்வே போலீசார் மீது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த மூன்று ரயில்களையும் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் போலீசார் உள்பட பலரும் காயமடைந்தனர்.

காலை முதல் ரயில்நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

ரயில் சேவை நிறுத்தம்:

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய மாநிலங்களில் ரயிலை எரித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தெற்கு ரயில்வே அதிகார வரம்பில் இருந்து வட இந்தியாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பீகார் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச மாநில பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget