Gujarat Election: விறுவிறுப்பாகும் குஜராத் தேர்தல்...! இதுதான் லேட்டஸ்ட் வாக்குப்பதிவு நிலவரம்..! வாக்களிக்க மக்கள் ஆர்வம்..
இன்று காலை 8 மணி முதல் குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 19.17% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 19.17% வாக்குகள் பதிவாகியுள்ளது.
19.17% voter turnout recorded till 11 am, in the second phase of #GujaratElections2022 pic.twitter.com/WeADnGgvGK
— ANI (@ANI) December 5, 2022
93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது, தேர்தல் களத்தில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். அகமதாபாத், வடோதரா போன்ற குஜராத்தின் வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 2 கோடி 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர், 1லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 26,409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
வாக்குப்பதிவு நிலவரம்:
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.75% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. முதற்கட்ட தேர்தலின் போது 11 மணி நிலவரப்படி 18.95% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை சிட அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1 ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமான தேர்தல் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமான தேர்தல் 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதற்கட்டத் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர் போன்ற 14 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்களிப்பதற்கு 26 ஆயிரத்து 409 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 36 ஆயிரம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
முதல்வர், அமித்ஷா வாக்களிப்பு
குஜராத்தில் மொத்தமாக 4 கோடியே 91 லட்சத்து 17 ஆயிரத்து 708 வாக்களர்கள் உள்ள நிலையில் , இரண்டாம் தேர்தலில் 2 கோடியே 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 1 லட்சத்து 13 ஆயிரம் பணியாளர்கள், அதிகாரிகள் இத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தலை பொருத்தவரை வட மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள வதோதரா, காந்திநகர், அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவே உற்றுநோக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பிரதமர் மோடி இன்று தனது ஆகமதாபாத்தில் உள்ள சபர்மதி தொகுதி பள்ளியில் நேரில் சென்று வாக்களித்தார். அதே போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமபாத் நரன்புராவில் உள்ள அங்கூர் தொகுதி, காமேஷ்வர் கோவில் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 10.30 மணியளவில் வாக்களித்தார். குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல் அகமதாபாதி உள்ள ஷிலாஜ் தொடக்க பள்ளியில் வாக்களித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

