UIDAI Update: ஆதார் கார்டை எப்படிதான் பயன்படுத்த வேண்டும்: குழப்பத்துக்கு தெளிவாக விளக்கம் கொடுக்கும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆதார் நகல்களை எந்தவொரு நிறுவனத்திற்கும் அளிக்க கூடாது என வெளியான அறிவிப்பு தொடர்பாக மற்றுமொரு புதிய அறிவிப்பை (Unique Identification Authority of India) UIDAI வெளியிட்டுள்ளது
ஆதார் தொடர்பான புதிய அறிவிப்பு:
ஆதார் அட்டையை போட்டோஷாப் செய்து தவறாக பயன்படுத்தப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் ஆதார் கார்டு நகலை யாருக்கும் பகிர வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பை தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விளக்கம் கொடுத்து மற்றொரு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
#Aadhaar holders are advised to exercise normal prudence in using and sharing their Aadhaar numbers.
— Aadhaar (@UIDAI) May 29, 2022
In view of possibility of misinterpretation the press release issued earlier stands withdrawn with immediate effect.https://t.co/ChmbVs8EjJ@GoI_MeitY @PIB_India
முன்பு வெளியான அறிவிப்பு:
எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆதார் நகல்களை அளிக்க கூடாது என ஆதார் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக முக்கியமான ஆலோசனைகளை வழங்கியது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். இத்தகைய அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.
புதிய விளக்கமளித்துள்ள அரசு:
இந்நிலையில் முன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பை, மக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தவலின் அடிப்படையில் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஆதார் கார்டை ஆதார் அட்டையை போட்டோஷாப் செய்து தவறாக பயன்படுத்தப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாஸ்க் கார்டை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
தவறான புரிதல்
ஆதார் கார்டு பாதுகாப்பற்றது என்று பரவி வரும் தகவல் தவறானது என்றும், மக்களின் அடையாளத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பது தொடர்பாக சிறப்பு அம்சங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாஸ்க் ஆதார்:
ஆதார் அட்டையில் 12 இலக்கங்கள் வெளிப்படையாக இருக்கும். ஆனால் மாஸ்க் ஆதார் அட்டையில் முழு இலக்கங்கள் தெரியாது, சில இலக்கங்கள் மறைக்கப்பட்டும் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும் வகையிலான ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதான் மாஸ்க ஆதார் கார்டு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மற்றவர்கள் போட்டோஷாப் செய்து தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
ஆதார்
இந்தியாவில் அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய உலக அளவில் மிகப்பெரிய அடையாள அட்டை அமைப்பாக ஆதார் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆதார் அட்டையை பலர் எதிர்த்து வந்தாலும், 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆதார் செல்லும் என்று அறிவித்தது. இது தனிப்பட்ட தகவல்களை கொண்டு இருக்கும், ஏமாற்ற முடியாத அடையாள அட்டை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அதே சமயம் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது. இந்த நிலையில் பல்வேறு சேவைகளை வழங்க ஆதார் கட்டாயம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது.
பயன்பாடு
வங்கிகளும் லோன் எடுப்பது தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டைகளை அடையாளமாக கேட்டு வருகிறது. ஹோட்டல்களில் கூட அடையாளத்திற்கு ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. இந்த நிலையில்தான் எந்தவொரு நிறுவனங்களுக்கும் ஆதார் நகல்களை மக்கள் அளிக்க கூடாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.
பாதுகாப்பு
அதில், ஆதார் விவரங்களை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதை எந்த நிறுவனங்களுக்கும் கொடுக்க கூடாது. ஆதார் விவரங்களை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் ஆதாரினை பதிவிறக்கம் செய்ய கூடாது. பொது இடங்களில், அதாவது கம்ப்யூட்டர் சென்டர் போன்ற இடங்களில் ஆதார் விவரங்களை தரவிறக்கம் செய்தால் அதை அங்கிருந்து டெலிட் செய்துவிட வேண்டும்.
பயன்பாடு
வங்கிகளும் லோன் எடுப்பது தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டைகளை அடையாளமாக கேட்டு வருகிறது. ஹோட்டல்களில் கூட அடையாளத்திற்கு ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. இந்த நிலையில்தான் எந்தவொரு நிறுவனங்களுக்கும் ஆதார் நகல்களை மக்கள் அளிக்க கூடாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.