Terrorists Killed: ஜம்முவில் 4 பயங்கரவாதிகள்... ஒரே மாதத்தில் 10 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சால் செக்டாரில் உள்ள காலா ஜங்கிள் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய பக்கம் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
In a joint operation, Army and Police have killed four #terrorists in Kala Jungle of Machhal sector in #Kupwara who were trying to infiltrate to our side from POJK.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) June 23, 2023
இந்திய ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
"ஒரு கூட்டு நடவடிக்கையில், குப்வாராவில் உள்ள மச்சல் செக்டாரின் காலா ஜங்கிள் பகுதியில் பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து எங்கள் பக்கம் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளை இராணுவமும் காவல்துறையும் சுட்டுக்கொன்றனர்" என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் தேதி குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் எல்ஓசிக்கு அருகிலுள்ள ஜுமாகுண்ட் பகுதியில் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு என்கவுன்டர் நடத்தினர். அப்போது அங்கு ஊடுருவ முயன்ர 5 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல், ஜூன் 13 அன்று, இதேபோன்ற கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இதில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டோபனார் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தச்சானின் டான்டர் கிராமத்தில் உள்ள ஹிஸ்புல் பயங்கரவாதி முதாசிர் அகமதுவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், ஜூன் 2 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.