மேலும் அறிய

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து: 35 பேர் பலி; பலர் மாயம்

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாகினர்.

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலர் மாயமாகினர். நூறு பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், "குஜராத் மாநிலம் மார்பி டவுனின் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் உள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் இன்று மாலை விபத்து நடந்தது. கேபிள்கள் அறுந்ததால் விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். அவர்களில் 100 பேர் ஆற்றில் தவறி விழுந்தனர். இந்தப் பாலம் கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  அரசு உயர் அதிகாரிகள் பலரும் நிகழ்விடத்தில் குவிந்துள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி? 
இன்று மாலை 6.42 விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்னும் ஆற்றில் 100க் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம். இந்தப் பாலம் அண்மையில் தான் சீரமைக்கப்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதி தான் இந்தப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து: 35 பேர் பலி; பலர் மாயம்

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிகழ்விடத்தில் பல்வேறு அரசுத் துறை உயரதிகாரிகளும் குவிந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "மோர்பி பால விபத்து என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திராவுக்கு பேசியுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ஷங்கவி மோர்பி பகுதிக்கு விரைந்துள்ளார். மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு:
இதற்கிடையில் மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து  நடந்த போது பாலத்தில் மக்கள் பலர் தொங்கிக் கொண்டிருந்த வீடியோவும், ஆற்றில் விழுந்து தத்தளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget