மேலும் அறிய

அடுத்தடுத்து ட்விஸ்ட்! தாக்கரேவுடன் 20 அதிருப்தி எம்எல்ஏக்கள்...எதிரணிக்குச் சென்ற அமைச்சர்.!

பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையிலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவோம் என தாக்கரே அணியினர் தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாம் குவஹாத்தியில் தங்கியுள்ள மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் மற்றொரு அமைச்சரான உதய் சமந்த் இன்று இணைந்தார். இதற்கிடையே, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் 20 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிரடியான அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவசேனா திட்டமிட்டுள்ளது. 

இதையும் படிக்க: ஆதரவு தராவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம்.. மிரட்டியதா எடப்பாடி தரப்பு? : ஓபிஎஸ் ஆதரவாளர் பேச்சால் பரபரப்பு

ஏக்நாத் ஷிண்டே, குலாப்ராவ் பாட்டீல், தாதா பூசே ஆகியோரின் அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்துல் சாட்டர், ஷம்புராஜே தேசாய் ஆகிய இணையமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அஸ்ஸாம் குவஹாத்தியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் மற்றொரு அமைச்சரான உதய் சமந்த் இன்று இணைந்தார். ஷிண்டேவின் அணியில் இணையும் ஒன்பது அமைச்சர் இவர் ஆவார். தாக்கரே அணியினர் பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், கட்சி சின்னம் தங்களுக்குதான் சொந்தம் என ஷிண்டே தெரிவித்திருந்தார். இதை மறுத்துள்ள தாக்கரே அணியினர், கட்சி மாறி தேர்தலை சந்திக்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சவால் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், "உங்களுக்கு தைரியம் இருந்தால், சிவசேனாவை விட்டு வெளியேறி, கட்சி மாறி தேர்தலை சந்தியுங்கள். நாங்கள் செய்வது தவறு, உத்தவ் தாக்கரே தலைமை தவறு, நாங்கள் அனைவரும் செய்வது தவறு என்று நீங்கள் நினைத்தால், ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்கவும். நாங்கள் தயார்" என்றார்.

பாஜகவில் இணைவது தொடர்பாக அதிருப்தி அணியில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மகாராஷ்டிர அமைச்சராக உள்ள பச்சு காடுவின் பிரஹர் ஜனசக்தி கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. 

இதுபற்றி உத்தவ் தாக்கரே ஆதரவாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "குவஹாத்தியில் இன்னும் எத்தனை நாள்கள் மறைந்து இருப்பீர்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

2026 ITR தாக்கல்: ஜூலை 31 & ஆகஸ்ட் 31 முக்கிய தேதிகள். ரீஃபண்ட் விரைவாக பெற என்ன செய்ய வேண்டும்?
2026 ITR தாக்கல்: ஜூலை 31 & ஆகஸ்ட் 31 முக்கிய தேதிகள். ரீஃபண்ட் விரைவாக பெற என்ன செய்ய வேண்டும்?
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Embed widget