12 மணி தலைப்புச் செய்திகள் 31-03-2021
இன்றைய நாளின் பகல் 12 மணிக்கான தலைப்பு செய்திகள்
*நாளை ஒரே நாளில் (ஏப்ரல் 1) முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
*விருப்பமிருந்தால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் ஓட்டுக்காக நிற்கவில்லை, நாட்டிற்காக நிற்கிறேன் - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
*தென்மண்டலங்களில் இரட்டைவழி ரயில்பாதை போடும் பணி - முன்பே திட்டமிடாததால் 8 மணிநேரம் முடங்கிய ரயில் போக்குவரத்துக்கு.
*கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி இதுவரை சுமார் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
*பிரேசில் நாட்டில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா - ஒரே நாளில் 3500-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
*கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் தன்னை தனிப்படுத்திக்கொண்ட நிலையில், அவர் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.
*தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
*பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தோடு தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு - நடிகர் அஜால் கான் இன்று கைது.
*தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.