Corona LIVE Updates: இந்தியா மிகவும் தயார் நிலையிலேயே இருக்கிறது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 3.49 லட்சம், நேற்று 3.52 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.23 லட்சமாக குறைந்தது.
LIVE
Background
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163-இல் இருந்து ஒரு கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு இரண்டாயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 213-ல் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 894-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 827 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 43 லட்சத்து 4 ஆயிரத்து 382-இல் இருந்து ஒரு கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்து 209 ஆக உள்ளது.
இந்தியா இந்தமுறைக் கொரோனாவை எதிர்கொள்ள மிகவும் தயாராகவே இருக்கிறது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியா முதல் அலைக் காலகட்டத்தை விட கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் மிகவும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
India is better prepared mentally and physically this year with more experience to beat COVID-19 pandemic as compared to 2020, says Union Health Minister Harsh Vardhan
— Press Trust of India (@PTI_News) April 27, 2021