கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை.. சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை..

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் கொரோனா விதிகள் முறையாகப் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-இன் கீழ் கடும் அறிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சில மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு ஊரடங்கு போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது.

இந்நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா விதிகளை பின்பற்றாமல் இருக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் கொரோனா விதிகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி அங்காடிகளில் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Tags: chennai Corona prakash Chennai Corporation Commissioner

தொடர்புடைய செய்திகள்

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை :  குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

டாப் நியூஸ்

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்