"இயந்திர கோளாறாரா.?" - ரீகால் செய்யப்படும் "ஹோண்டா ஹனெஸ் 350cc பைக்கள்".!
அந்த நிறுவனம் தயாரித்த "ஹோண்டா ஹனெஸ் 350cc" பைக்களை தற்போது திரும்பப்பெற்று வருகின்றது.
ஜப்பானிய பணமதிப்பில் சுமார் 15.36 டிரில்லியன் அளவிற்கு லாபத்தை கடந்த 2018ம் ஆண்டு ஈட்டிய நிறுவனம் தான் ஹோண்டா. ஜப்பான் நாட்டின் தலைகள் டோக்கியோவை தலைநகரமாக கொண்டு, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது இந்த நிறுவனம். உலக அளவில் பல நாடுகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பில் முதன்மை வகித்து வரும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவிலும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அந்த நிறுவனம் தயாரித்த "ஹோண்டா ஹனெஸ் 350cc" பைக்களை தற்போது திரும்பப்பெற்று வருகின்றது. மேற்குறிப்பிட்ட இந்த மாடல் வண்டிகள் கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 25 நவம்பர் 2020 முதல் 12 டிசம்பர் 2020 வரை தயாரிக்கப்பட்டு விற்பனையான வண்டிகளை அந்த நிறுவனம் திரும்பப்பெற்று வருகின்றது. ஆனால் இதுவரை இந்த மாடல் வாங்கியவர்களிடம் இருந்து எந்தவித புகாரும் தங்களுக்கு வரவில்லை என்றும் "வேறுபட்ட தரத்தை சார்த்த பொருள், வாகன தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அடையாளம் கண்டிருப்பதாகவும்" அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.