மேலும் அறிய
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கனிமொழி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

கனிமொழி
திமுக எம்பி கனிமொழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொற்று பாதிக்கப்பட்ட நிலையிலும், முழு கவச உடை அணிந்து வந்து சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இந்நிலையில், கனிமொழி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். அடுத்த ஐந்து நாட்களுக்கு அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
மதுரை
தமிழ்நாடு





















