MK Stalin ordered Legal Action: அம்மா உணவகத்தை தாக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் - ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
#அம்மாஉணவகம்காப்போம் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில், உணவகத்தை தாக்கிய இரண்டு பேரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு.
அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இருவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதாகைகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவை சேர்ந்த சிலர் ஜெயலலிதா படங்களை வைக்க கூடாது எனக்கோரி பதாகைகளை வீசியெறிந்தனர். மேலும், உள்ள இருந்த காய்கறி, மளிகை பொருட்களை எல்லாம் தூக்கி வீசியெறிந்தனர்.
இதையடுத்து, திமுக கட்சியினர் சிலர் தாக்கியதாக உணவக ஊழியர்கள் மதுரவாயல் போலீசாரிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலனாதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே திமுகவினர் வன்முறை அராஜகத்தை தொடங்கியுள்ளதாக கருத்து கூறி வருகின்றனர்.

ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.. pic.twitter.com/SAMdgVApDh
— DJayakumar (@offiofDJ) May 4, 2021

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம் மற்றும் கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’ எனப்பதிவிட்டுள்ளார்.
மேலும், #அம்மாஉணவகம்காப்போம் என்ற ஹேஷ்டேக் உருவாக்குப்பட்டு டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்நிலையில், அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இருவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்... pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கட்சியில் இருந்து நீக்கவும் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார்’ எனப் பதிவிட்டார்.