Crime : காதல் பிரச்சினையில் இளைஞர் படுகொலை..! சாக்கில் கட்டி சடலத்தை வீசிய கொடூரம்..! பெண்ணின் தந்தை கைது..!
ஆத்தூர் அருகே காதல் பிரச்சினையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டு சடலத்தை சாக்கில் கட்டி வீசிய பயங்கரம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அழகுவிஜய் (24). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், இவரது மகன் அஜீத்(26). கூலி வேலை செய்து வருகிறார். அஜீத்தினுடைய தங்கை சுதா (17) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அழகுவிஜய் சுதாவை காதலித்து வந்ததாக தெரிகிறது.
ABP Exclusive: ஆட்சியில் திமுக, சிக்கலில் அதிமுக, தமிழ் மாடல் கொள்கையுடன் களமிறங்கும் பாஜக..
இவர்களது காதல் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவரவும் இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அங்கு வந்த சுதாவின் அண்ணன் அஜித், தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகுவிஜயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!
இதனால், அதிர்ச்சியடைந்த அஜீத் சடலத்தை சேடபட்டி அருகே உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தந்தை தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அஜீத்தின் தந்தையும், அஜீத்தும் சேர்ந்து ஒரு சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.
காலையில் அஜித் வீட்டின் அருகில் இரத்தம் இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரித்ததை அடுத்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், போலீசார் விசாரணையில் தமிழ்செல்வன் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி வீசியதாக தெரிவித்ததை அடுத்து அழகு விஜய் சடலத்தை கைப்பற்றிய போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு உடற்கூற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., முருகேசன் மற்றும் செம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி சுதாவின் தந்தை தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அஜீத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்