12000 பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி தருமபுரியில் தற்காலிக ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி தருமபுரியில் தற்காலிக ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்.
![12000 பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி தருமபுரியில் தற்காலிக ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம் Temporary teachers signature movement in Dharmapuri TNN 12000 பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி தருமபுரியில் தற்காலிக ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/07/2a379df764cdd7d95998003c18f06da21725704983801113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் 2012 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
தற்காலிக ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய கையெழுத்து இயக்கம்
இந்த தற்காலிக ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல் வாக்குறுதியில் பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்றாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை தற்காலிக ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் தங்களை நிரந்தரமாக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முதல்வரின் கவனத்தை ஈர்க்க கையெழுத்து இயக்கம்
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்தை ஈர்க்க, தமிழ்நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை இன்று தருமபுரியில் தொடங்கி உள்ளனர்.
முதல்வர் 2016 இல் சட்டமன்றத்தில் சொல்லிய வாக்கு நிறைவேற்ற வேண்டும்
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து இருந்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
கலைஞர் போலவே, முதல்வர் ஸ்டாலினும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதியை கொடுத்தார். உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி மயிலாடுதுறை கன்னியாகுமரியில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் பணி நிரந்தரம் செய்வேன் என்றார்.
வாக்குறுதியை நம்பி இருக்கும் ஆசிரியர்கள்
இந்த வாக்குறுதியை நம்பிதான் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களும் காத்துள்ளோம்.
ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சியில் இந்த 2024 ஆம் ஆண்டு வழங்கிய 2500 ரூபாய் சம்பள உயர்வால் கிடைக்கின்ற, தற்போதைய 12,500 ரூபாய் சம்பளம் இந்த காலத்தில் குடும்பத்தை நடத்த போதாது என்பதை, முதல்வர் ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும்.
விலைவாசி உயர்ந்துவிட்ட நிலையில் சம்பளம் குறைவாக உள்ளது
விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாரு 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாவது வழங்க வேண்டும். மே மாதமும் சம்பளத்துடன், அனைத்து வேலை நாட்களிலும் முழு நேர வேலை வழங்கி 13 ஆண்டுகளாக செய்கின்ற இந்த வேலையை முறைப்படுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரத்தை
பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கிடைக்க
பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்
காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் வலியுறுத்தினர். இந்த கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)