விரதம் இருக்கும்போது பொரித்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து.. உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை
அவர் இன்று விரதம் இருக்கிறார் நாங்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கிறோம் என்பது போன்ற சொற்களை அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அவர் இன்று விரதம் இருக்கிறார் நாங்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கிறோம் என்பது போன்ற சொற்களை அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
உண்ணாவிரதம் இருக்கும்போது பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது
உண்ணாவிரதத்தை பொறுத்தவரை பெரும்பாலும் கோரிக்கையை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்கான ஒரு கவன ஈர்ப்பாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் விரதம் இருப்பது என்பது பெரும்பாலான மக்களின் நடைமுறையில் உள்ள ஒன்றாகவே உள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக விரதம் இருப்பார்கள். சிலர் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கடவுள் பெயரை சொல்லி விரதம் இருப்பார்கள். வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
வாரத்திற்கு ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு மிகவும் நல்லது
வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கோரி இப்படி விரதம் இருப்பதன் மூலம் சில நோய்களை குணமாக்கலாம் என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க விரதம் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பலர் வழக்கமாக உணவை உட்கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் சோர்வை போக்குவதற்கு விரத நாட்களில் வருத்த மற்றும் இனிப்பான தின்பண்டங்களை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.
இது மிகவும் ஆபத்தானது என்றும் விரதம் என்ற பெயரில் இது போன்ற பொருட்களை உட்கொள்வது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மருத்துவ துறை ஆய்வாளர்கள் இது குறித்து உடலில் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கூறியதாவது:-
உடலை இளைப்பாற வைப்பதே விரதம் அல்லது உண்ணாவிரதத்தின் நோக்கம் பகலில் குறிப்பிட்ட நேரங்களில் அல்லது 24 மணி நேரமும் குடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சிலரால் உணவு உண்ணாமல் இருக்கும் விரதத்தின் போது பசி தாங்க முடியாது.
இதனால் விரத காலத்தில் சிலர் வறுத்து அல்லது எண்ணெய், நெய் நிறைந்த பண்டங்களை உண்கின்றன. இந்த உணவுகளில் அதிக கல்லூரிகள் உள்ளன. இது கல்லீரல் செயல்களை சேதப்படுத்துகிறது. இது போன்ற வறுத்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரல் கொழுப்பு சேர வழிவகுக்கும்.
இது நோயையும் உண்டாக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு நமது உடலில் உள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கிறது.
விரதத்தின் போது எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் உடல் கொழுப்பு சேரும். இந்த நிலை கல்லீரல் வீக்கம் என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களை முறையாக விரதம் இருப்பதன் மூலம் தடுக்கலாம். அதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக மீட்டெடுக்க முடியும்.
கலோரிகள் அதிகமானால் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்
ஆனால் அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் வயிறு அல்லது உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். உணவினால் தூண்டப்படும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ரத்தத்தை பாதிக்கலாம். எண்ணெய் மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. அது அதிக உப்பு இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் உப்பு அளவை பராமரிக்க கடினமாக உழைக்க வேண்டும் இதன் காரணமாகவே சிறுநீர் பாதிப்புகள் ஏற்படுகிறது. உண்ணாவிரத காலத்தில் முழுமையான பட்டினி இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை எனவே சத்தான உணவை சரியான வகையில் எடுத்துக்கொள்வதன் மூலம் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.
ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உண்ணும்போது காலையில் வழக்கமான உணவை அதே நேரத்தில் சாப்பிட வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பவர்கள் இரவில் பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
உண்ணாவிரதம் இருக்கும்போது இரவில் கட்டாயம் பால் குடிக்க வேண்டும்
இரவில் பால் குடிக்க வேண்டும் மாதம் முழுவதும் விரதம் இருப்பவர்களும் காலை உணவை அதே நேரத்தில் சாப்பிட்டு இரவில் உணவை குறைவாக சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட கொழுப்பு நீக்கப்பட்ட பால் பழங்கள் அல்லது உலர் பழங்கள் சாப்பிட வேண்டும். இது தவிர உருளைக்கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து சாப்பிடலாம் என்று கூறினர்.