காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கல்லில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து எம்பி ஆ.மணி நேரில் ஆய்வு.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து எம்பி ஆ.மணி நேரில் ஆய்வு.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து எம்பி ஆ.மணி நேரில் ஆய்வு.
கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 41 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவேரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியிலிருந்து, 1.55 இலட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல் பகுதியில் அருவிகள், பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் 14வது நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு உள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்தும் கரையோரம் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்தும் இன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒகேனக்கல் பரிசல்துறை, பூங்கா இந்த இடங்களில் வெள்ளப் பெருக்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி ஆ.மணி, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அடிக்கடி வந்து செல்கிறார்.
மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்து, ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாகமரை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
மேலும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் உபரிநீராக செல்லும் தண்ணீரை பம்பிங் செய்து ஏரிகளில் நிரப்பி மாவட்டத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்தே கொண்டனர்.