தருமபுரி: பொய்த்துப் போன பருவமழை... நீரின்றி, வறண்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய வாணியாறு அணை
தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் நீரின்றி, வறண்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய வாணியாறு அணை. 10,517 ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடி பாதிப்பு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் சுமார் 65 அடி உயரத்தில் வாணியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள 18 கிராமங்களில் 10517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் தண்ணீர் தேங்குவதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதோடு அப்பகுதி செழிப்பாகவும் இருக்கும். கடந்த 8 ஆண்டுகளாக அணைகளின் நீர் பிடிப்பு பகுதியான ஏற்காடு மலைப் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அணை நிரம்பி பழைய ஆயக்கட்டு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அணையிலும் போதிய அளவு தண்ணீர் இருந்தது. இந்நிலையில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் அணைக்கு போதிய நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு போய் காணப்படுகிறது. தற்பொழுது அணை முழுவதும் நீரின்றி வரண்டு கால்நடைகளின் மேச்சல் நிலமாக மாறி உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி காயும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. மேலும் கோடை மழை கை கொடுத்தால், அணைக்கு நீர் வந்தால் மட்டுமே வாணியாறு அணை பாசனத்தில் உள்ள பயிர்களை பாதுகாக்க முடியும்.
இதனால் வாழை மற்றும் பாக்கு கரும்பு பயிர் சாகுபடி செய்து வந்த பயிர்கள் வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வாணி ஆறு அணை வறட்சியின் பிடியில் சிக்கியதால் 10 ஆயிரம் ஐநூத்தி பதினேழு ஏக்கரில் வாழை வாக்கு மற்றும் கரும்பு பயிர் பாடி வதங்கி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இதுகுறித்து வாணியாறு பாசன விவசாயிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு அணை நிரம்பியதால், பழைய ஆயகட்டு கால்வாய்கள் வழியாக உபரி நீர் வெளியேறப்பட்டது. இதன் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியம்பட்டி, தென்கரைகோட்டை ஏரிகள் நிரம்பியது. அங்கிருந்து உபரியாக வெளியேறிய தண்ணீர் அரூர் பெரிய ஏரிக்கு சென்றது. ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையில், அணை முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்த அணை நீரை நம்பி சுற்று வட்டார விவசாயிகள் வாழை, பாக்கு, கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். சுமார் 10, 517 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாடி வதங்கி கருகி வரும் பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அனை வறண்டு கிடப்பதால், பாப்பிரெட்டிப்பட்டி பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், வெங்கடசமுத்திரம், மோளையானூர், போதகாடு, பையர்நத்தம், பொம்மிடி உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் கடும் குடிநீர் கட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.