Corona Lockdown Helpline: அவசர தேவைகளுக்கு உதவி எண்களை அறிவித்த சென்னை காவல்துறை
தனியாக வசிக்கும் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால் அவசர உதவி மையத்தை அழைக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவைகளுக்கு 24 மணி நேர தொலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகர போலீசார் சார்பில் கொரோனா ஊரடங்கு நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான உதவி மையத்தை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்கு 94981 81236, 94981 81239 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Greater Chennai Police Message : #chennaicitypolice #greaterchennaipolice #chennaipolice pic.twitter.com/XBz70hW1PC
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) May 10, 2021

அத்தியாவசிய மருந்து பொருட்கள் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டால் அவசர உதவி மையத்தை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-பதிவு, மூத்த குடிமக்கள், அவசர தேவைகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளவும், தடையற்ற ஆக்சிஜன் டாங்கர் போக்குவரத்து மற்றும் ஆக்சிசன் சிலிண்டர்கள் போக்குவரத்துக்கும் உதவி மையத்தை அணுகலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Greater #Chennai police has set up a 24x7 help desk for 14 days (May 10 - 24) to assist public who require any clarification/ help regarding Covid lockdown
⠀⠀⠀#ChennaiHelp #ChennaiSOS #ChennaiCovidHelp #ChennaiCovid #CovidChennai #Remdesivir #Oxygen #Police #ChennaiPolice pic.twitter.com/cQOZiAjPH5
— COVID19 Chennai Help (@covid19chennai) May 10, 2021

மேலும், தனியாக வசிக்கும் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால் இந்த எண்களில் அழைக்கலாம். அத்தியாவசிய பொருட்கள், ரெம்டெசிவர் மருந்து போக்குவரத்தில் தடை ஏற்பட்டால் காவல்துறையை அழைக்கலாம்.