மேலும் அறிய
Advertisement
சென்னையில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு..
சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தினசரி பரிசோதனையில் 40 சதவிகிதம் பேருக்கு சென்னையில் தொற்று கண்டறியப்படுவதாகவும், அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், ஆலந்தூரில் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனா தொற்று 135 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion