மேலும் அறிய

கோவை அன்னூரில் விவசாயி மீது போடப்பட்ட பிசிஆர் வழக்கை திரும்பப்பெறக்கோரி கடையடைப்பு...!

கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆபாசமாக பேசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. அதில் முத்துசாமி வீடியோ எடுப்பதை அறிந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகமாடியது தெரியவந்தது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி விவசாயி கோபால்சாமி என்பவர் தனது நிலத்திற்கான ஆவணங்களை சரிபார்க்க சென்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் உடன் கோபால்சாமிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது கோபால்சாமி சாதிய ரீதியாக பட்டியல் இனத்தை சார்ந்த கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக  வீடியோ வெளியானது.


கோவை அன்னூரில் விவசாயி மீது போடப்பட்ட பிசிஆர் வழக்கை திரும்பப்பெறக்கோரி கடையடைப்பு...!

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்  உத்தரவின் பேரில் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ்  விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து விவசாயி கோபால்சாமி கிராம உதவியாளர் முத்துசாமியை சாதி ரீதியாக நடத்தியதாகவும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த  விவசாயி கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்க  காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து முத்துசாமி புகாரின் பேரில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கோபால்சாமி தலைமறைவானர்.


கோவை அன்னூரில் விவசாயி மீது போடப்பட்ட பிசிஆர் வழக்கை திரும்பப்பெறக்கோரி கடையடைப்பு...!

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவின் மற்றொரு பகுதி சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் வாக்குவாதத்தில் ஈடுபடும் கோபால்சாமியை  கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆபாசமாக பேசி  தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. அதில் முத்துசாமி வீடியோ எடுப்பதை அறிந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகளில் விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் தவறான தகவல்களை அளித்ததால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து  வேண்டுமென்றே விவசாயி மீது பொய் புகார் அளித்தது தெரிய வந்ததை அடுத்து, விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  விவசாயிகள் அமைப்பினர் வலியுறுத்தினர். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், கலைச்செல்வி, முத்துசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று அன்னூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.


கோவை அன்னூரில் விவசாயி மீது போடப்பட்ட பிசிஆர் வழக்கை திரும்பப்பெறக்கோரி கடையடைப்பு...!

இன்று காலை 6 மணி முதல் அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்து வன்கொடுமை பிரிவின் கீழ் கோபால்சாமி மீது வழக்குப்பதிவு செய்யக் காரணமாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துசாமியை பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும். கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget