மேலும் அறிய

'அவினாசி பெரிய கோவில் தாக்குதல் குறித்து சிபிஐ அல்லது என்.ஐ.ஏ. விசாரணை வேண்டும்’ - வானதி சீனிவாசன்

"அவினாசி ஆலயத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கும் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்."

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 'பெரிய கோவில்’ என்றழைக்கப்படும், அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இவ்வாலயம், அப்பகுதி மக்களின் உணர்வுகளோடும், அன்றாட வாழ்வியலோடும் கலந்துவிட்ட ஒன்று. மே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்  சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. முருகப்பெருனானின் வேலை பிடுங்கி, அதனைக் கொண்டு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் கருவறைக்குள் நுழைந்தும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கின்றன.

இந்நிலையில், கோயில் கோபுரத்தில் பதுங்கி இருந்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மனநிலை சரியில்லாத அவர்தான் சிலைகளை உடைத்து, கருவறைக்குள் அட்டூழியம் செய்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இது நம்பத்தகுந்ததாக இல்லை. கடந்த காலங்களிலும் அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு இவ்வாலயத்தின் திருத்தேர் எரிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு அம்பாள் சன்னதிக்குள் புகுந்து, ஒருவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது மாற்று மதத்தினரின் நூல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆலயத்தின் பின்பகுதியில் பொதுமக்கள் வழிபட்டு வந்த சிலைகள் கடந்த ஆண்டு சேதப்படுத்தப்பட்டன. இப்படி இக்கோயில், குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில் தான், தற்போதைய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது.

இதற்கெல்லாம் தனி நபர் ஒருவர் தான் காரணம், அதுவும் மனநிலை சரியில்லாதவர்தான் காரணம் என்பதை அவிநாசிலிங்கேஸ்வரரின் பக்தர்கள் யாரும் நம்பவில்லை. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, இந்து மதத்தின் மீதும், இந்து கடவுள்களின் மீது மட்டும் நம்பிக்கையற்ற அரசு. மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்து மதப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. மாற்று மதத்தினரின் பண்டிகைகள், விழாக்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஹிந்து மத பண்டிகைகள், கோயில் விழாக்களில் மட்டும் கலந்து கொள்வதில்லை. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான சீர்காழி அருள்மிகு சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். ஆனால்,  முதலமைச்சரோ, அமைச்சர்களோ அங்கு செல்லவில்லை. இயல்பாகவே இந்து மதத்தின் மீதும், இந்து கோயில்கள் மீதும் திமுக அரசு நம்பிக்கையற்று இருப்பதால்,  கோயில்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்ற சந்தேகம் எப்போதும் எழுகிறது. 

எனவே, அவினாசி ஆலயத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கும் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். ஏனென்றால் எப்போதெல்லாம் கோயில் சிலைகள் உடைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், மனநிலை சரியில்லாதவர் என்று ஒருவரை காவல் துறை கைது செய்கிறது. தமிழகத்தில், ஆயிரம் ஆண்டுகள், பல நூறு ஆண்டுகள் பழமையான, பல்லாயிரம் இந்து கோயில்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க,  'தனி பாதுகாப்பு படை' ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை திமுக அரசு உணரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget