மேலும் அறிய

அரசு பேருந்தில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்த விவகாரம் ; இருவர் பணியிடை நீக்கம்

பேருந்து இயக்கப்பட்ட போது பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகையில் விரிசல் ஏற்பட்டு, பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் முதல் குரும்பபாளையம் வரைக்கு 110 எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து தினமும் TN 38 N 2658 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து இயக்கப்பட்டபோது, பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததால் பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் ஏறியவுடன் சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

நடத்துநர் பயணி இடையே வாக்குவாதம்

அப்போது பலகையில் விரிசல் ஏற்பட்டு பேருந்தின் சக்கரங்கள் ஓடுவது தெரிந்துள்ளது. பின்னர் இது குறித்து நடத்துனரிடம் பலகை உறுதியாக உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து நடத்துநர் முறையாக பதில் சொல்லாததை அடுத்து பயணிக்கும், நடத்துநருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடத்துனருடன் பயணி ஒருவர் வாக்குவாதம் செய்த நிலையில், மற்றொரு பயணி அதை வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டார். பின்னர் இதை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து விஷ்ணு சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக பரவியது. மேலும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இருவர் பணியிடை நீக்கம்

இந்நிலையில் பலகையில் விரிசலுடன் பேருந்தை வழித்தடத்தில் இயங்க அனுமதித்த கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்து கோட்ட மேலாளர் ஸ்ரீதர் உத்திரவிட்டுள்ளார். உடனடியாக பேருந்தை சரி செய்யவும் அறிவுறுத்த பட்டுள்ளது. பேருந்து பழுதடைந்து இருப்பதை முறையாக ஆய்வு செய்யாமல், வழித்தடத்தில் இயக்க அனுமதித்ததால் கிளை மேலாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
Embed widget