மேலும் அறிய
Advertisement
திருப்பூர் : மாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் பணியிட மாற்றம்..!
இறைச்சி கடைக்கு சென்ற வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வேலுச்சாமியை எச்சரித்தார். ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யலாம், மாட்டிறைச்சி விற்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆருகே மாட்டிறைச்சி விற்கக்கூடாது என மாட்டிறைச்சி உரிமையாளரை எச்சரித்த வட்டாட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கானாங்குளம் பகுதி உள்ளது. இப்பகுதியில் வேலுச்சாமி என்பவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். அண்மையில் இவரது இறைச்சி கடைக்கு இரவு நேரத்தில் சென்ற அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச் செல்வன், மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வேலுச்சாமியை எச்சரித்தார். ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யலாம், மாட்டிறைச்சி விற்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். அதற்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும், அனைவரும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதை நிறுத்தினால் தானும் நிறுத்துவதாக வேலுச்சாமி கூறியுள்ளார். இதற்கு வேலுச்சாமியை மட்டும் சொல்லவில்லை, இந்த பகுதியில் அதிகமாக நடப்பதாகவும், மாடுகள் வதைக்கப்படுவதாக இங்கு புகார் வந்ததால் தான் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என தமிழ்செல்வன் கண்டிப்புடன் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மாட்டிறைச்சி விற்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் தமிழ்செல்வன் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. மாட்டிறைச்சி கடை உரிமையாளரை வட்டாச்சியர் எச்சரித்ததற்கு கண்டனங்கள் எழுந்தன. கோழி, ஆடு இறைச்சி விற்பனை செய்யலாம், ஆனால் மாட்டிறைச்சி மட்டும் விற்பனை செய்யக்கூடாது என வட்டாட்சியர் பேசியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் வட்டாட்சியர் தமிழ்செல்வனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள், ஒன்றிணைந்த உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion