மேலும் அறிய

Myv3 ads : 'வியாபாரமும், விளம்பரமும் உள்ள வரை பணம் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ - சக்தி ஆனந்த் பேட்டி

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் வழக்கறிஞர்கள் உடன் சக்தி ஆனந்த் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோவை மாநகர காவல் துறையினர் சக்தி ஆனந்திற்கு சம்மன் அனுப்பினர். இதன் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் வழக்கறிஞர்கள் உடன் சக்தி ஆனந்த் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Myv3 ads : 'வியாபாரமும், விளம்பரமும் உள்ள வரை பணம் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ - சக்தி ஆனந்த் பேட்டி

இந்த விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சக்தி ஆனந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு எவ்வாறு பணம் கொடுக்கப்படுகிறது? விற்கப்படும் பொருட்களின் விவரங்கள் குறித்து விசாரணையின்போது கேட்கப்பட்டது. என்னிடம் 87 வகையான  விற்பனை பொருட்கள் உள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மாதிரிகளை சமர்ப்பித்துள்ளேன். ஆயுர்வேதம், சித்த மருந்துகளுக்கு உரிமம் வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? நான் அது தொடர்பான மருந்துகளை தான் கொடுத்து வருகிறேன்.

காவல் துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பேன். நீலாம்பூர் பகுதியில் கூட்டிய கூட்டம் நான் கூட்டவில்லை. அதில் நானும் ஒருவனாக கலந்து கொண்டேன். கூட்டம் கூடினால் வழக்கு பதிவு செய்வது இயல்பு. ஆனால் அன்று கூடிய கூட்டத்திற்கு வழக்கு பதிந்ததாக எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கவில்லை. என்னுடைய உண்மையான கூட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஒரு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள். எந்த இடமாக இருந்தாலும், அந்த கூட்டத்தை நான் கூட்டி காண்பிப்பேன். பிரபலம் ஆனால் பிராப்ளம் வருவது இயல்புதான். எனக்கு அரசியல் பின்புலம் கிடையாது. வியாபாரமும், விளம்பரமும் உள்ள வரை மக்களுக்கு நான் பணம் கொடுத்துக்கொண்டே இருப்பேன். மக்களின் உணர்வுகளை வைத்து மோசடி செய்கிறேன் என்பதில் உண்மையில்லை. படித்தவர்கள்தான் என்னுடைய செயலியை பயன்படுத்துகின்றனர். பாமர மக்களை ஏமாற்றுவது என்பது அடிப்படை அற்றவை” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Embed widget