மேலும் அறிய

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது

இந்த சம்பவம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது

மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது

இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து காவல் துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து நேற்றிரவு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி, உடலை மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காதது தான் தற்கொலைக்கு காரணமெனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனிடையே புகாருக்கு உள்ளான ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு கோவை மாநகர துணை ஆணையாளர் ஜெயச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்த வழக்கில் குற்றச்செயலில் ஈடுபட்டவர் நேற்றே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி எழுதிய கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Musk

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
Embed widget