கோவை மெட்ரோ ரயிலுக்கு திட்ட அறிக்கை தயார் - 3 கட்டங்களாக 139 கி.மீ.க்கு தடம் அமைக்க திட்டம்
”சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் முதற்கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், சத்தியமங்கலம் சாலை மற்றும் உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரை 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்படும்”
![கோவை மெட்ரோ ரயிலுக்கு திட்ட அறிக்கை தயார் - 3 கட்டங்களாக 139 கி.மீ.க்கு தடம் அமைக்க திட்டம் Preparation of Preliminary Project Report for Coimbatore Metro Rail Project கோவை மெட்ரோ ரயிலுக்கு திட்ட அறிக்கை தயார் - 3 கட்டங்களாக 139 கி.மீ.க்கு தடம் அமைக்க திட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/04/476e2f1210b599e5a079a07e84e67a87_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கோயம்புத்தூர் மாஸ் ரேபிட் டிரான்ஸிட் அமைப்பிற்கான சாத்தியக்கூறு ஆய்வு தமிழ்நாடு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், முதற் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையானது ஆலோசகர்கள் M/s SYSTRA & RITES Ltd மூலம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ”கோவை மாவட்டத்தில் உருவாக்கப்பட உள்ள பல்வேறு வழித்தடங்களில் கோவை மெட்ரோ ரயில் வசதி குறித்து ஆலோசகர்களால் விளக்கப்பட்டது. மொத்தம் 139 கிமீ மெட்ரோ ரயில் மூன்று கட்டங்களாக CMRL ஆல் எடுக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் முதற்கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், சத்தியமங்கலம் சாலையில் உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்படும்.
இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் செய்யப்படும் ஒப்புதல்களுக்குப் பிறகு தொடங்கும். தற்போதுள்ள 139 கிமீ திட்டத்தில் இருந்து மேலும் நீட்டிப்பு மற்றும் புதிய பகுதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் ஆய்வின் கீழ் எடுக்கப்படும். மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ இயக்கப்பட்டு, அதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்படும்.
போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, உள்ளூர் கலை, கால் மேல் பாலம், ஏற்கனவே உள்ள சாலையைக் கடப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய மற்றும் பிற வசதிகள் உள்ள இடங்களில் நிலையங்கள் கட்டப்படும். விமான நிலையங்கள், ரயில் நிலையம், மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ இயக்கப்பட்டு, அதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, உள்ளூர் கலை, கால் மேல்பாலம், ஏற்கனவே உள்ள சாலையைக் கடப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய மற்றும் பிற வசதிகள் உள்ள இடங்களில் நிலையங்கள் கட்டப்படும்.
விமான நிலையங்கள், ரயில் நிலையம், பஸ் டெர்மினல்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பல இடங்களில் பொது, தனியார் கூட்டுறவின் கீழ் நிலையங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொருவரும் நிலத்திலுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்காக, துல்லியமான இருப்பிட விவரங்கள் அந்தந்தத் துறைகளுக்கு CMRL ஆல் பகிரப்படும். மெட்ரோ இரயில்ல்களை இரவுகலில் நிறுவதற்கான டெப்போ வெள்ளலூரில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)