மேலும் அறிய

NIA Raid : கோவை கார் வெடிப்பு வழக்கு: பல்வேறு இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. சோதனை..

உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23-ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டபோது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

NIA Raid : கோவை கார் வெடிப்பு வழக்கு: பல்வேறு இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. சோதனை..

கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது.

மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். 

இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்டமாக முகமது ஆசாருதீன், முகமது தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அப்சர்கான் ஆகிய 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் இவ்வழக்கில் மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ் கான், முகமது தௌபீக், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவருக்கு, இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் கடந்த மாதம் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

NIA Raid : கோவை கார் வெடிப்பு வழக்கு: பல்வேறு இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. சோதனை..

இந்நிலையில் உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜி.எம். நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி 82 வது வார்டு கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமீமூன் அன்சாரி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Embed widget