மேலும் அறிய

’அதிமுக ஏன் பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?’ - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

"மின் கட்டண மாற்றியமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சிகள் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்."

கோவை கொடிசியா அரங்கில் 6 வது கோவை புத்தகத் திருவிழா இன்று துவங்கியது. இதனை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 31 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வருகின்ற 28 ம் தேதி 5 ஆயிரம் மாணவிகள் திருக்குறள் வாசிப்பு செய்ய உள்ளனர். 2 இலட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 250 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ள இக்கண்காட்சியில், பயனுள்ள நூல்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. பத்து நாட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கொடிசியா அரங்கத்திற்கு வந்து செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. இதற்கு கடந்த ஆட்சி கால நிர்வாக சீர்கெடே காரணம். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மின்சாரத் துறையில் கடன் உள்ளது. தமிழ்நாடு மின்தேவையில் மூன்றில் ஒரு பங்கு சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பங்கு தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆட்சியில் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து மின்மிகை மாநிலம் என பொய் பிரச்சாரம் செய்தனர். 

ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக தான் மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடி பேருக்கு மின் கட்டணம் செலுத்துபவர்களில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் மின்கட்டணம் எவ்வளவு?. மின்கட்டண மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் குஜராத், கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.

மின் கட்டண மாற்றியமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சிகள் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிமுக பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஏற்புடையதாக இருந்திருக்கும். பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக அதிமுக டில்லி எஜமானர் பயந்து கைவிட்டு விட்டனர். மக்களுக்கு தரமான தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.

2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம்  உயர்த்தப்பட்டது. அதிமுக யாரை கண்டு பயப்படுகிறது? அதிமுக ஆட்சியில் ஏன் உதய் மின் திட்டத்தில் சேர்ந்தார்கள்? அதற்கான யார்  அளித்த நிர்ப்பந்தம் காரணம்? மின் கட்டணத்தை மாற்றியமைக்குமாறு  ஒன்றிய அரசிடம் இருந்து கடித்தங்கள் வந்தது உண்மை தானே?. ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும். கேஸ் மானியம் போல மின்சார வாரியம் அறிவிப்பு இல்லை. அதில் மானியம் போக மீதியிருக்கும் பணத்தைக் காட்டினால் போதும். எதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Embed widget