கோவை: 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா..!
நேற்றைய தினத்தை விட இன்று 559 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. கோவை தினசரி பாதிப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 559 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கோவையில் இன்று 1897 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 16 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 23548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 3577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 467 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் நேற்றைய தினத்தை விட இன்று 146 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி தொற்று பாதிப்புகள் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 924 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 993 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 8655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 127913 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 118533 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 725 ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1297 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 128 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 123550 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 110277 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1040 ஆக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 189 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 226 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 40597 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38068 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 223ஆக உள்ளது.